கினியாவில் சிவில் ஆட்சியை அமைக்க இராணுவம் உறுதி

கினியாவில் 39 மாத நிலைமாற்றக் காலத்துக்குப் பின் சிவில் அரசை கொண்டுவரப்போவதாக அந்நாட்டு இராணுவ அரசு அறிவித்துள்ளது.

இந்த பிரேரணை கினிய பாராளுமன்றத்திற்கு விடப்படுவதாக இராணுவ அரசின் தலைவர் கர்னல் மமாடி டவும்போயா தொலைக்காட்சியில் உரையாற்றும்போது தெரிவித்துள்ளார். அவரது இராணுவம் கடந்த ஆண்டு ஜனநாயக முறையில் தேர்வான ஜனாதிபதியை பதவி கவிழ்த்தார். இதனை ஆரம்பத்தில் பல கினிய நாட்டவர்களும் வரவேற்றனர். எனினும் ஆட்சியை சிவில் அரசுக்கு கையளிக்கத் தவறியது குறித்து இராணுவ ஆட்சியின் மீது அதிருப்தி வலுத்து வருகிறது.

இந்நிலையில் சிவில் அரசை அமைப்பதற்கு மேற்கு ஆபிரிக்க நாடுகளின் கூட்டணி கடந்த திங்கட்கிழமை கெடு விதித்ததை அடுத்தே கினிய இராணுவம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Mon, 05/02/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை