புற்றுநோய் சிகிச்சையில் விளாடிமிர் புடின்?

கை மாறுகிறதா அதிகாரம்?

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்யப்படலாம் என்றும், அந்நாட்டு பாதுகாப்பு கவுன்சில் செயலாளரான நிகோலாய் பட்ருஷேவிடம் தற்காலிகமாக அதிகாரம் ஒப்படைக்கப்படும் என்றும் அமெரிக்காவின் நியூேயார்க் போஸ்ட் அறிக்கை வெளியிட்டுள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு இரு மாதங்களை கடந்துள்ள நிலையில், நாளுக்கு நாள் அங்கு நிலைமை மிக மோசமாகி வருகிறது. பல இலட்சம் மக்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில் அந்நாடு மீண்டு வருமா என்பதே கேள்விக்குறிதான்.

இந்நிலையில் போர் தொடர்பான செய்திகளை விட ரஷ்ய நாட்டின் ஜனாதிபதியான விளாடிமிர் புடினின் உடல்நலம் குறித்து வதந்திகள் தான் அதிகம் உலாவுகின்றன. அவருக்கு புற்றுநோய் இருப்பதாகவும் பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

கடந்த சில ஆண்டுகளாக விளாடிமிர் புடினின் உடல் மொழி மற்றும் அவர் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய விதம் குறித்து பல சுகாதார நிபுணர்கள் ஆய்வு செய்ததில் பல யூகங்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்யப்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

புடினுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியதாகவும், முன்னாள் ரஷ்ய வெளிநாட்டு புலனாய்வு லெப்டினன்ட் ஜெனரலால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் டெலிகிராம் சேனலை செய்தி நிறுவனமான ANIஐ மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளது.

அவருக்கு மேற்கொள்ள இருக்கும் அறுவை சிகிச்சை மற்றும் பிற சிகிச்சைகள் புடினை குறுகிய காலத்திற்கு செயலிழக்கச் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என அந்த அறிக்கை கூறியது. சமீப காலங்களில் புடினின் நோய் தாக்கியது போல் உள்ள தோற்றம் மற்றும் பொது இடங்களில் இயல்பற்ற பதட்டமான நடத்தை பற்றி குறிப்பிட்டுள்ள நியூயார்க் போஸ்ட், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பார்கின்சன் நோய் உட்பட பல கடுமையான நோய்களால் பாதிக்கப்படுவதாகவும் வதந்தி பரவியுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு புடின், நிகோலாய் பட்ருஷேவிடம் இரண்டு மணி நேரம் மனது விட்டு பேசியதாகவும் நியூயார்க் போஸ்ட் மேற்கோள் காட்டி கூறியது. அவருடைய ஒரே நம்பகமான கூட்டாளியாகவும் நண்பராகவும் நிகோலாயை புடின் கருதுகிறார் அவரது உடல்நிலை மோசமடைந்தால், நாட்டின் உண்மையான கட்டுப்பாடு தற்காலிகமாக பட்ருஷேவின் கைகளுக்குச் செல்லும் என்று அவர் அப்போது உறுதியளித்தார்.

Wed, 05/04/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை