திறந்த சந்தைகளில் டொலர் கொள்வனவு

அமைச்சரவை அனுமதி வழங்கியது

எரிபொருள் மற்றும் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கான கட்டணத்தை செலுத்துவதற்காக திறந்த சந்தைகளில் அமெரிக்க டொலரை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டதன் பின்னரான முதலாவது அமைச்சரவை நேற்று இடம்பெற்றது.

நேற்றைய கூட்டத்தில் பிரதமர் முன்வைத்த இந்த யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு டீசலை பகிர்ந்தளிக்கு நடவடிக்கை இன்று முற்பகல் முதல் மீள ஆரம்பிக்கப்பட்டது.

எனினும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக எமது செய்தியாளர்கள் குறிப்பிட்டனர்.

 

Tue, 05/17/2022 - 08:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை