சீனாவின் அண்டை நாடுகள் மீதான ஆக்கிரமிப்புகளை கண்காணிக்கும் குவாட் அமைப்பு

அமெரிக்கா தலைமையிலான குவார்ட் அமைப்பு சீனாவின் ஆக்கிரமிப்பு மீதான பார்வையை மேலும் கூர்மைப்படுத்தும் என்பதோடு ஐரோப்பிய நாடுகளின் கவனத்தையும் ஈர்க்கும் என்றும் இந்திய அரசியல் ஆய்வாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். சீனா இமாலய பிரதேசங்களில் மேற்கொண்டுவரும் ஆக்கிரமிப்புகள் மற்றும் தென் சீனக் கடல் பிராந்தியத்தில் நடத்தி வரும் தீவுகள் மீதான உரிமை கோரல் என்பவற்றில் உலக நாடுகள் கவனம் செலுத்துவதில்லை என்ற கவலை நீடித்து வந்தது. இந் நிலையில் குவாட் அமைப்பு அக் குறையைத் தீர்க்கும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.

தன்னுடன் எல்லைகளை பகிர்ந்து கொள்ளும் நாடுகளுடன் மட்டுமன்றி எல்லைகளுக்கு அப்பால் உள்ள நாடுகளுடன் சீனா முரண்டுபடுவதாக குளோபல் ஸ்டார் பத்திரிகையில் எழுதியிருக்கும் அரசியல் ஆய்வாளர்கள் கிறிஸ் பிளெக் பேர்ன், இமாலய எல்லையோரக் கிராமங்களில் புதிய நகரங்களுக்கான கட்டமைப்புகளை ஏற்படுத்தி வருவதாகவும், எலக்ட்ரோனிக் யுத்தத்துக்கான நிலையங்கள், காவலரண்கள், ரேடார் பதுங்கு அரண்கள் என்பனவற்றை உருவாக்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தென்சீனக் கடலில் ஸ்ப்ரேட்லி தீவுகள் மற்றும் பெரசல் தீவுகளை பிலிப்பைன்ஸ், தாய்வான், மலேசியா, வியட்நாம், புருணை ஆகிய நாடுகள் சொந்தம் கொண்டாடிவர அவற்றை சீனா ஆக்கிரமித்துள்ளது. திபெத், பாகிஸ்தான், பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகளையும் தமது செல்வாக்கு வளையத்துக்குள் கொண்டு வருவதில் சீனா முனைப்புடன் உள்ளது.

சீனாவின் இந்த ஊடுருவலை உலக நாடுகள் கண்டு கொள்வதில்லை என்று இந்திய அவதானிகள் விசனம் தெரிவித்து வந்த நிலையிலேயே குவாட் அமைப்பு செயற்பாட்டுக்கு வந்துள்ளது. இந்தியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, பிரிட்டன் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பு, இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டதாகும்.

Mon, 05/16/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை