அமெரிக்காவில் இனவெறி தாக்குதலில் 10 பேர் பலி

அமெரிக்காவின் பபலோ நகரில் 18 வயது வெள்ளையின ஆடவர் ஒருவர் கறுப்பின அயலவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதனை ஒரு இனவெறித் தாக்குதல் என்று நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

கடைத் தொகுதி ஒன்றில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். தாக்குதல் துப்பாக்கி மற்றும் உடல் கவசத்துடன் இருந்த தாக்குதல்தாரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நியுயோர்க் நகர கெளண்டி ஒன்றில் இருக்கும் தமது வீட்டில் இருந்து ஒரு மணித்தியாலம் வாகனத்தை செலுத்தி இந்தத் தாக்குதலை நடத்தி இருப்பதோடு, அதனை இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்புச் செய்துள்ளார். தாக்குதலுக்கு இலக்கானவர்களில் பதினொரு பேர் கறுப்பினத்தவர் என்பதோடு இருவர் வெள்ளையினத்தவராவர்.

இதனை வெறுப்புக் குற்றம் மற்றும் இனவெறித் தாக்குதல் என்ற கோணத்தில் விசாரணை செய்யப்படுவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இதனை ஒரு அருவருப்பான தாக்குதல் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கண்டித்துள்ளார்.

Mon, 05/16/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை