எரிபொருள் நிலையங்களில் போதியளவு எரிபொருட்கள்

தேவைக்கு அதிகமாகவே உள்ளது – காமினி லொக்குகே

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அதிகளவான பௌசர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள போதிலும் எரிபொருள் தேவைக்கு அதிகமாகவே அங்கு இருந்தமையால் அவை திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

கொழும்பு பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அனுப்பப்பட்ட எரிபொருள் பௌசர்கள் பல திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தேவைக்கு அதிகமாக எரிபொருள் விநியோகிக்கப்படுவதைக் காணும் சிலர் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசையில் காத்துக் கிடப்பதாகவும் அவர் கூறினார்.

எரிபொருள் மேலதிகமாக இருந்தால் ஏன் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் நிற்க வேண்டும் என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

   

Sat, 03/26/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை