ரஷ்ய விமானங்களுக்கு ஐரோப்பா வான் தடை

ஐரோப்பிய ஒன்றியத்தில் ரஷ்ய விமானங்களுக்கு முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

“ரஷ்யாவுக்கு சொந்தமாக, ரஷ்யாவில் பதிவு செய்யப்பட்ட அல்லது ரஷ்ய கட்டுப்பாட்டு விமானங்களுக்கு ஐரோப்பிய ஒன்றிய வான் பகுதியை நாம் மூடுகிறோம்” என்று ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் உர்சுலா வொன் டெர் லெயேன் தெரிவித்தார்.

தனியார் ஜெட்கள் உட்பட அவ்வாறான அனைத்து விமானங்களும் ஐரோப்பிய ஒன்றிய நாட்டுக்கு மேலால் பறப்பது, தரையிறங்குவது அல்லது புறப்படுவதற்கு தற்போது முடியாதுள்ளது. ரஷ்ய விமானங்களுக்கு பிரிட்டன் வான் பகுதியிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tue, 03/01/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை