உலகின் பெரிய விமானம் தகர்ப்பு

உக்ரைன் தலைநகர் கியேவுக்கு அருகில் உள்ள விமானத் தளம் ஒன்றில் சண்டையிட்டு வரும் ரஷ்ய துருப்புகள் உலகின் மிகப் பெரிய விமானத்தை அழித்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. உக்ரைனின் அன்டொனோவ்–225 ரகச் சரக்கு விமானம் தலைநகர் கியேவுக்கு அருகிலுள்ள அன்டொனோவ் விமான நிலையத்தில் தகர்த்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. 84 நீளமுள்ள அந்த விமானத்தால் ஒரு நேரத்தில் 250 தொன்் சரக்குகள்வரை ஏந்திச் செல்லமுடியும். மணிக்கு 850 கிலோமீற்றர் வேகத்தில் பறக்கக்கூடிய அந்த விமானம் ‘ம்ரியா’ அதாவது ‘கனவு’ என்றும் அழைக்கப்பட்டது.

Tue, 03/01/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை