ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வன்னி மாநாடு

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வன்னி மாநாடு-SLFP Vanni Conference

ஶ்ரீ லங்கா சுதந்திக் கட்சியின் வன்னி மாநாடு வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் நேற்று (19) முற்பகல் 11.00 மணியளவில் இடம்பெற்றது.

இவ் நிகழ்வில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாடுகள் குறித்து கட்சி உறுப்பினர்களால் கலந்துரையாடப்பட்டது.

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வன்னி மாநாடு-SLFP Vanni Conference

இக்கலந்துரையாடலின் போது ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை வளர்த்து மக்களுக்கு சிறந்த ஆட்சியை ஏற்படுத்த மாவட்டம் மாவட்டமாக செல்கின்றோம். ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை வலுப்படுத்துங்கள். உங்களுடன் சகோதரமாக வேலை செய்ய இன்னும் பல சகோதர கட்சிகளை இணைத்துக் கொண்டு உங்களிடத்தில் வர இருக்கின்றோம் எனவும் மக்கள் அனைவரும் குறித்த கட்சிக்கு ஆதரவு வழங்குமாறும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வன்னி மாநாடு-SLFP Vanni Conference

குறித்த நிகழ்வில் அமைச்சர்களான நிமால் சிறிபால டி சில்வா, தயாசிறி ஜயசேகர, துமிந்த திஸாநாயக்க, முன்னாள் மத்திய மாகாண ஆளுனர் சரத் ஏக்கநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் மற்றும் நகரசபை, பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

ஓமந்தை விஷேட நிருபர்

Sun, 02/20/2022 - 06:14


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை