சவூதி பெண்களுக்கு ரயில் ஓட்டுநர் பணி

பெண்களுக்கான வேலை வாய்ப்புகளை அதிகரித்து வரும் சவூதி அரேபியா, அண்மையில் ரயில் ஓட்டுநர் வேலைக்கு 30 பெண்களைப் பணியமர்த்துவது குறித்த வேலை விளம்பரம் ஒன்றை வெளியிட்டது. அந்த வேலைக்கு சுமார் 28,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இதுகுறித்து, ரயில் சேவை நிறுவனமான ‘ரென்ப்’, இணையவழி மதிப்பீடுகளைத் தொடர்ந்து, விண்ணப்பதாரர்களைப் பாதியாகக் குறைத்துள்ளதாக குறிப்பிட்டது.

தேர்வு செய்யப்படும் பெண்கள் மக்காவிற்கும் மதீனாவிற்கும் இடையில் புல்லட் ரயில்களை இயக்குவார்கள் என்றும் அது குறிப்பிட்டது. மருத்துவ ஊழியர்கள், ஆசிரியர்கள் போன்ற பணிகளுக்கு மட்டுமே சவூதி பெண்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். கடந்த 2018ஆம் ஆண்டு வரை, அங்கு பெண்கள் வாகனம் ஓட்டுவதற்குகூட அனுமதி இருக்கவில்லை. அங்கு பெண்களின் பங்களிப்பு கடந்த ஐந்து ஆண்டுகளில் இரட்டிப்பாகி உள்ளது.

Sun, 02/20/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை