ஒன்றுகூடல் நிகழ்வுகள் அதிகரிப்பால் ஆபத்து!

PHI சங்க தலைவர் உபுல் எச்சரிக்கை

நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் நடைபெறும் இசைக் கச்சேரிகள் உள்ளிட்ட சமூக ஒன்றுகூடல்களால் எதிர்காலத்தில் கொவிட் 19 வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனூடாக தடுப்பூசிக்கு பதிலளிக்காத கொவிட் வகையை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக ுள்ளதாக அதன் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

புள்ளிவிபர ரீதியாக கொவிட் தொற்று தொடர்பில் சரியான தகவல்கள் கிடைக்கப்படாத போதிலும், இலங்கையில் கொவிட் பரவல் மிக அதிகமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Mon, 02/28/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை