நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டை கருத்திற்கொண்டு இன்று திங்கட்கிழமை முதல் தனியார் போக்குவரத்து பஸ் சேவைகளை மட்டுப்படுத்த நேரிடும் என தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார். அதற்கிணங்க மிக அவசியமான நேரங்களில் மாத்திரம் போதியளவு பஸ் சேவையை மேற்கொள்ளவுள்ளதாகவும் ஏனைய பஸ் சேவைகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக அலுவலக நேரத்தை கவனத்திற்கொண்டு அதற்கான காலஅட்டவணை நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, பஸ்களில் மக்களை கொண்டுசெல்லும் போது செல்லவேண்டிய இடம் முடியும்வரை தேவைப்படும் எரிபொருள் இல்லையாயின் அவ்வாறான பஸ் சேவைகளை முன்னெடுக்கக்கூடாது என்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஏற்கனவே நிபந்தனைகளை விதித்திருந்ததுடன் நாட்டில் தற்போது நிலைவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக அந்த நிபந்தனையை தற்காலிகமாக தளர்த்துவதற்கு தீர்மானித்துள்ளதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதற்கிணங்க பஸ் வண்டியொன்றுக்கு போதுமான எரிபொருள் உடனேயே குறித்த பயணம் ஆரம்பிக்கப்படவேண்டும் என்றும் இடைநடுவில் அதற்கான எரிபொருளை பெற நேரிட்டால் அந்த பஸ் வண்டிக்கான போக்குவரத்து அனுமதி ரத்துச் செய்யப்படுமென நடைமுறையிலுள்ள ஆணைக்குழுவின் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் தற்போது நாட்டில் நிலவும் டீசல் தட்டுப்பாடு காரணமாக குறித்த பஸ்கள் இடைநடுவில் எரிபொருளை பெற்றுக்ெகாள்வதற்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. (ஸ)
(லோரன்ஸ் செல்வநாயகம்)
from tkn