இலங்கைக்கு ஆதரவளிக்கும் கடமைப்பாடு எமக்குள்ளது

தெற்காசிய உலக வங்கி பணிப்பாளர் டுவிட்டரில் பதிவு

இலங்கைக்கு ஆதரவளிக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளதாக உலக வங்கியின் மாலைத்தீவு, நேபாளம் மற்றும் இலங்கை மற்றும் தெற்காசியாவிற்கான பணிப்பாளர் அறிஸ் ஹடாட் சர்வோஸ் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அவர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பகுதியில் இது தொடர்பில் கருத்துத் தெரிவித்திருந்தார்.

உங்கள் விருந்தோம்பலுக்கு நன்றி.நான் முக்கிய அரசாங்க அதிகாரிகளைச் சந்தித்தேன், உற்பத்தித்  திறன் கொண்ட நாடுகளின் செயல்திறன் மதிப்பாய்வுக் கூட்டத்தை நடத்தினேன் . கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்ட பொருளாதார மன்றத் கூட்டத்திலும் பங்கேற்றேன் என்று குறிப்பிட்டுள்ள அவர், இலங்கைக்கு ஒத்துழைக்க கடமைப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். (பா)

Mon, 02/07/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை