ஆப்கான் மனிதாபிமான நெருக்கடி பற்றி கவலை

ஆப்கானிஸ்தானில் நிலவும் மனிதாபிமான நெருக்கடி குறித்து மீண்டும் கவலை தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டத் தலைவர் டேவிட் பீஸ்லி, அந்நாட்டு மக்கள் உயிர்வாழ்வதற்காக தம் குழந்தைகளையும், உடல் உறுப்புகளையும் விற்பனை செய்யத் தொடங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் சனத்தொகையில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் பட்டினியில் வாடுவதால், அவர்களுக்கான மனிதாபிமான உதவிகளை விரைவுபடுத்துமாறு சர்வதேச சமூகத்தினரிடம் அவர் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Mon, 02/07/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை