4 நிமிடங்களில் முடிவு கிடைக்கும் கொவிட் சோதனை கண்டுபிடிப்பு

பீ.சி.ஆர் ஆய்வுகூட சோதனை போன்ற துல்லியமானதும் நான்கு நிமிடங்களுக்குள் முடிவு கிடைக்கக் கூடியதுமான புதிய கொரோனா சோதனை முறை ஒன்றை உருவாக்கி இருப்பதாக சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கொவிட்–19 தொற்றுக்கான மிகத் துல்லியமான மற்றும் உணர்திறன் கொண்ட சோதனை முறையாக பீ.சி.ஆர் கருதப்பட்டபோதும், அதன் முடிவுகள் கிடைக்க சாதாரணமாக பல மணி நேரம் எடுத்துக் கொள்ளும்.

சோதனைக்கான அதிக தேவை ஏற்படுவது சில நாடுகளில் மேலதிக பணியாளர்களின் அவசியத்தை ஏற்படுத்தி இருப்பதோடு, ஒமிக்ரோன் போன்ற வேகமாக பரவக்கூடிய திரிபுகள் தீவிரம் அடைவதற்கு காரணமாக அமைகிறது.

இதற்கு தாம் தீர்வு கண்டிருப்பதாக ஷங்காயில் உள்ள பூதான் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

துடைப்பான்களில் இருந்து மரபணு பொருட்களை பகுப்பாய்வு செய்ய நுன்மின்னணுவை பயன்படுத்துவது கொவிட் ஆய்வுகூட சோதனைக்கு எடுத்துக்கொள்ளும் காலத்தை குறைக்க முடியும் என்று விஞ்ஞான சஞ்சிகை ஒன்றில் கடந்த திங்கட்கிழமை வெளியான ஆய்வுக் கட்டுரையில் அந்த ஆய்வுக் குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.

Wed, 02/09/2022 - 08:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை