ரஷ்யப் பிரதமர் இந்தியா வருகை

ரஷ்ய பிரதமர் மிகைல் மிசுஸ்டின் வரும் ஜனவரி இரண்டாம் வாரத்தில் இந்தியாவுக்கு தனது முதல் விஜயத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். ஜனாதிபதி விளாடிமிர் புடின் கடந்த டிசம்பர் 6 ஆம் திகதி வருடாந்த மாநாட்டில் பாதுகாப்பு, வலுசக்தி மற்றும் முதலீட்டுத் துறைகளில் முக்கிய முடிவுகளை எட்டிய நிலையிலேயே இந்தப் பயணம் இடம்பெறவுள்ளது.

குஜராத் உச்சிமாநாட்டில் ரஷ்ய தூர கிழக்கில் இருந்து பதினொருவர் உட்பட 15 ஆளுநர்களின் தூதுக்குழுவுக்கு பிரதமர் தலைமை வகிக்கவுள்ளதாக தெரியவருகிறது. ரஷ்யாவின் வளம்மிக்க தூரக் கிழக்கு பிராந்தியம் இந்திய–ரஷ்ய உறவுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

10ஆவது குஜராத் உச்சிமாநாடு ஜனவரி 10 முதல் 12 வரை இடம்பெற ஏற்பாடாகியுள்ளது. 

Tue, 01/04/2022 - 09:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை