காலி துறைமுக சூழல் சுற்றுலா வலயமாகிறது

அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன

காலி துறைமுகத்தை சுற்றி கொழும்பு துறைமுக நகரத்திற்கு நிகரான சுற்றுலா வலயம் ஒன்று அமைக்கப்படும் என துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

சுற்றுலா வலயத்தை 40 ஹெக்டேரில் மணல் நிரப்பி அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

காலி துறைமுகம் சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யப்படும் என்ற அரசாங்கத்தின் தேசிய கொள்கையின் ஒரு அங்கமாகவே இந்த அபிவிருத்தி இடம்பெறவுள்ளது. கொழும்பு துறைமுக நகரத்தைப் போன்று காலியிலும் தனியார் முதலீட்டாளர்கள் ஊடாக சுற்றுலாத் துறையுடன் தொடர்புடைய வணிக வளாகங்கள், ஹோட்டல்கள் மற்றும் விடுதிகள் என்பன நிறுவப்படும். இத் திட்டத்தின் மூலம் காலியை சுற்றுலா தலமாக மேம்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.

 

Sat, 01/29/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை