ஹொன்டுராஸின் முதலாவது பெண் ஜனாதிபதி காஸ்ட்ரோ பதவியேற்பு

அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் ஹொன்டுராஸின் முதல் பெண் ஜனாதிபதி ஷியோமோரா காஸ்ட்ரோ பதவி ஏற்றுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற பதவி ஏற்பு நிகழ்வில் பேசிய அவர், உடைந்த நாட்டுக்கு தாம் தலைமை வகிப்பதாக உறுதி அளித்திருப்பதோடு சமூக நீதி மற்றும் வெளிப்படைத் தன்மையை பேணுவதாக குறிப்பிட்டார்.

போதைக்கடத்தல் கும்பல்களை முறியடிப்பதாகவும் கடுமையான கருக்கலைப்புச் சட்டத்தை தளர்த்துவதாகவும் 62 வயது காஸ்ட்ரோ கூறியுள்ளார்.

காஸ்ட்ரோவின் கணவர் மனுவேல் செலயா 2006 தொடக்கம் 2009 வரை ஹொன்டுராஸில் ஆட்சி புரிந்த நிலையில் இராணுவ சதிப்புரட்சி மூலம் பதவி கவிழ்க்கப்பட்டார். இந்நிலையில் இரு முறை ஜனாதிபதி பதவிக்காக போட்டியிட்ட காஸ்ட்ரோ கடந்த நவம்பரில் இடம்பெற்ற தேர்தலில் வெற்றியீட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sat, 01/29/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை