உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலம் நீடிப்பு

அதி விசேட வர்த்தமானி வெளியானது

அனைத்து உள்ளூராட்சி மன்றங்களினதும் பதவிக் காலங்கள் மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளன.

இதற்குரிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றினை அரசாங்க சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு நேற்றுமுன்தினம் வெளியிட்டுள்ளது.

இதற்கமைய நாட்டின் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களினதும் பதவிக் காலங்கள் 2023 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளன. 24 மாநகர சபைகள், 41 நகர சபைகள் மற்றும் 275 பிரதேச சபைகளின் பதவிக் காலங்களே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளன.

Wed, 01/12/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை