கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சீனாவின் மூன்றாவது நகரிலும் முடக்கநிலை அமுலுக்கு வந்துள்ளது.
ஹனான் மாகாணத்தில் உள்ள அன்யாங் நகரில் இருக்கும் ஐந்து மில்லியன் மக்களும் தமது வீடுகளை விட்டு வெளியேறக்கூடாது என்றும் வீதிகளில் வாகனங்களை செலுத்தக்கூடாது என்றும் அதிகாரிகள் கடந்த திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளனர்.
ஹனானில் இருக்கும் மற்றொரு நகரான யூசுவில் கடந்த வாரம் முடக்கநிலை அமுல்படுத்தப்பட்டதோடு 13 மில்லியன் மக்கள் வசிக்கும் ஷியானில் மூன்றாவது வாரமாக முடக்கநிலை அமுலில் உள்ளது.
சீனாவில் நேற்று 110 புதிய தொற்று சம்பவங்கள் பதிவானதோடு, அமெரிக்கா போன்ற நாடுகளில் அயிரக்கணக்கான தொற்று சம்பவங்கள் அடையாளம் காணப்படும் நிலையில் இது குறைவான எண்ணிக்கையாகும்.
Wed, 01/12/2022 - 08:04
from tkn