அமெரிக்க இராணுவ உதவி உக்ரைனை சென்றடைந்தது

ரஷ்யாவுடனான பதற்றம்:

உக்ரைனுடனான எல்லையில் ஆயிரக்கணக்கான ரஷ்ய துருப்புகள் குவிக்கப்பட்டிருக்கும் பதற்ற சூழலிலேயே இந்த இராணுவ உதவிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளின்கன் கடந்த வாரம் உக்ரைனுக்கு பயணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த 200 மில்லியன் டொலர் பொதிக்கு அமெரிக்கா கடந்த டிசம்பர் மாதம் ஒப்புதல் அளித்திருந்தது.

“ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு எதிராக உக்ரைனின் இறைமை மற்றும் ஆட்புல ஒரிமைப்பாட்டை பாதுகாக்கும் தற்போதைய முயற்சியில் உக்ரைன் ஆயுதப் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்கா இதுபோன்ற உதவியை தொடர்ந்து வழங்கும்” என்று அந்நாட்டு தூதரகம் கடந்த சனிக்கிழமை பேஸ்புக்கில் தெரிவித்திருந்தது.

உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சர் இந்த உதவிக்காக அமெரிக்காவுக்கு நன்றி கூறியுள்ளார்.

மறுபுறம் பல்டிக் நாடுகளான எஸ்டோனியா, லத்வியா மற்றும் லிதுவேனியா ஆகியவை அமெரிக்கா தயாரிப்பான பீரங்கி எதிர்ப்பு மற்றும் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை உக்ரைனுக்கு அனுப்பவுள்ளன. உக்ரைனுக்கு மேற்குலக நாடுகள் ஆயுதங்கள் வழங்குவது மிக ஆபத்தானது என்றும் அது பதற்றத்தை தணிக்க உதவாது என்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் பேச்சாளர் டிமிட்ரி பெஸ்கொவ் கடந்த வாரம் கூறியிருந்தார்.

இந்தப் பதற்றத்தை தணிப்பதற்காக உக்ரைனுக்கு நேட்டோ அங்கத்துவத்தை வழங்குவதை தடை செய்யும் ரஷ்யாவின் பிராதான கோரிக்கையை மேற்குலக நாடுகள் நிராகரித்துள்ளன.

இது தொடர்பில் பிளின்கன் மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லவ்ரோவுக்கு இடையே கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பேச்சுவார்த்தை முன்னேற்றம் இன்று முடிந்தது.

2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ரஷ்யப் படைகள் எல்லையில் குவிக்கப்பட்ட நிலையில், படையெடுப்பு அல்லது ஊடுருவல் நிகழலாம் என்று மேற்கத்திய, உக்ரைனிய உளவு அமைப்புகள் கூறுகின்றன.

ஆனால் எந்தத் தாக்குதலுக்கும் திட்டமிடவில்லை என்று ரஷ்யா மறுத்துள்ளது.

Mon, 01/24/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை