பழமொழி' கூறிய துருக்கி பெண் செய்தியாளர் கைது

துருக்கி ஜனாதிபதியை அவமதித்த குற்றச்சாட்டில் பிரபல செய்தியாளர் செதெப் கபாஸை தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை ஸ்தான்பூலில் கைது செய்யப்பட்ட கபாஸை அவரது வழக்கு விசாரணைக்காக தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

எதிர்க்கட்சி உடன் தொடர்புபட்ட தொலைக்காட்சி ஒன்றின் நேரடி நிகழ்ச்சியில் ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவானை இலக்கு வைத்து பழமொழிகளை கூறியதாக அவர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

இந்தக் குற்றசாட்டுக்கு ஒன்று முதல் நான்கு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

“பிரபலமான பழமொழி ஒன்று உள்ளது அதில், முடிசூடப்பட்ட தலை புத்திசாலியாகிறது என்று கூறப்படுகிறது. ஆனால் அது உண்மையில்லை என்பதை நாம் பார்க்கிறோம்” என்று அவர் தொலைக்காட்சியில் குறிப்பிட்டுள்ளது. “அரண்மனைக்கு நுழைந்த மாத்திரத்தில் காளை மாடு மன்னராவதில்லை. ஆனால் அரண்மனை கொட்டைகையாக மாறிவிடும்” என்ற பழமொழியையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவரது கருத்து பொறுப்பற்றது என்று எர்துவானின் பேச்சாளர் பஹ்ரத்தின் அல்தூன் தெரிவித்துள்ளார்.

'செய்தியாளர் என்று கூறுக்கொள்ளும் ஒருவர் எமது ஜனாதிபதியை அப்பட்டமாக அவமிக்கிறார், இதற்கு வெறுப்பை தூண்டுவதைத் தவிர வேறு நோக்கமில்லை' என்று அவர் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

Mon, 01/24/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை