திருமலை பொது வைத்தியசாலை புதிய இடத்தில் அமைக்க முடிவு

கெஹலிய தலைமையிலான கூட்டத்தில் தீர்மானம்

திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள கடும் நெரிசல் காரணமாக வைத்தியசாலையை வேறு இடத்துக்கு மாற்றுவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த விடயங்கள் தொடர்பிலான விசேட கலந்துரையாடல் (27) சுகாதார  அமைச்சில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தும் கலந்துகொண்டார்.

திருகோணமலை மாவட்டத்திலுள்ள பிரதான வைத்தியசாலை இதுவென்பதுடன், 100 வருடங்களுக்கு மேல் பழைமை வாய்ந்த பல கட்டடங்களும் வைத்தியசாலை வளாகத்தில் உள்ளன.

தற்போதைய சூழ்நிலையில் புதிய கட்டடங்களை அங்கு நிர்மாணிப்பதற்கு போதிய இடவசதி இல்லயெனவும் இந்தக் கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டது. அது மாத்திரமன்றி திருகோணமலை நகருக்கு வெளியேயும் நகருக்கு அண்மித்த இடத்தில் புதிய வைத்தியசாலையை நிர்மாணிப்பது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

Wed, 12/29/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை