பைசர் தடுப்பூசி மேலுமொரு தொகுதி நாட்டுக்கு வந்தது

எமிரேட்ஸ் விமானம் மூலமாக வந்தடைவு

கொவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்துக்கு உதவும் நோக்கில் மேலும் ஒரு தொகை பைசர் தடுப்பூசிகள் நேற்றுக் காலை நாட்டை வந்தடைந்தன.

32 பெட்டிகளில் 1,014 கிலோ எடையுள்ள இந்த தடுப்பூசிகள் ஆரம்பத்தில் நெதர்லாந்திலிருந்து டுபாய்க்கு அனுப்பப்பட்டது.

பின்னர் 182,400 பைசர் தடுப்பூசிகள் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து எமிரேட்ஸ் விமானத்தினூடாக நேற்றுக் காலை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. விமான நிலையத்தை வந்தடைந்த தடுப்பூசிகள் பாதுகாப்பாக தரையிறக்கம் செய்யப்பட்டு, கொழும்பில் அமைந்துள்ள அரச மருந்தாக்கல் கூட்டுத் தாபனத்தின் களஞ்சியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

 

 

Fri, 12/03/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை