பிரியந்த குமாரவின் சடலம் நாளை இலங்கைக்கு கொண்டுவரப்படும்

பிரியந்த குமாரவின் சடலம் நாளை இலங்கைக்கு கொண்டுவரப்படும்-Remains of Diyawadanage Don Nandasiri Priyantha Kumara to be brought to Sri Lanka Tomorrow

2021 டிசம்பர் 03ஆந் திகதி பாகிஸ்தானில் சியல்கோட் பகுதியில் கலகக் கும்பலால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட தியவதனகே தொன் நந்தசிறி பிரியந்த குமாரவின் சடலம் நாளை (06) இலங்கைக்கு இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை ஊடாக அரச செலவில் சடலம் நாளை கொண்டுவரப்படவுள்ளதாக, வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அவரது நெருங்கிய உறவினர்களால் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதோடு, வெளிநாட்டு அமைச்சு இந்நடவடிக்கைகளின் ஒருங்கிணைப்பை மேற்கொண்டு வருகின்றது.

இதேவேளை, பிரியந்த குமாரவின் மரணம் தொடர்பிலான விசாரணை அறிக்கை ஒன்றை வழங்குமாறு இஸ்லாமாபாத்தில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சிடம் கோரியுள்ளது.

இழப்பீடுகளை வழங்குவது தொடர்பில் பாகிஸ்தான் அதிகாரிகள் மற்றும் இறந்தவரின் தொழில் தருனருடன் வெளிநாட்டு அமைச்சின் ஒருங்கிணைப்புடன் இஸ்லாமாபாத்தில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகின்றது.

Sun, 12/05/2021 - 14:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை