ஒமிக்ரோன் திரிபில் மிதமான அறிகுறிகள்

ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் திரிபு மிதமான அறிகுறிகளையே ஏற்படுத்தக்கூடும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

இருப்பினும் கூடுதல் புலனாய்வு மேற்கொள்ளப்பட வேண்டுமென அது குறிப்பிட்டது.

அதன் மூலம், ஒமிக்ரோன் திரிபின் சீற்றம், இதுவரை பரவியிருக்கும் கொரோனா வைரஸ் வகைகளுடன் ஒப்பிடுகையில், வேறுபட்டதா என்பதை நிர்ணயிக்க முடியும் என்று கூறப்பட்டது.

இதுவரை சேகரிக்கப்பட்ட தகவல்களின்படி, ஒமிக்ரோன் திரிபு, டெல்டா வகை வைரஸை விட மேலும் எளிதில் பரவக்கூடியது என்று நம்பப்படுகிறது.

இருப்பினும், அது டெல்டா வைரஸ் பரவலை விஞ்சிவிடுமா என்பதை உறுதியாகக் கூறமுடியாது என்று அமைப்பு கூறியது.

கொவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஒமிக்ரோன் திரிபினால் மீண்டும் பாதிக்கப்படும் சாத்தியம் அதிகம் என்று உலக சுகாதார அமைப்பு அண்மையில் கூறியிருந்தது.

ஓமிக்ரோன் திரிபு, டெல்டா திரிபை விட, குறைவான பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதற்கு ஆதாரம் ஓரளவு உள்ளதாகவும் அது குறிப்பிட்டது.

 

Sun, 12/12/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை