பூஸ்டர் தடுப்பூசி பெறாவிடின் கொரோனா சுனாமியே வரலாம்

இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன எச்சரிக்கிறார்

பண்டிகைக் காலங்களை கழிப்பதற்கு எண்ணியுள்ளோர் மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தாமல் செயற்பட்டால் வருட இறுதியில் நாட்டில் கொரோனா சுனாமியொன்றே ஏற்படலாம் என மருந்துகள் உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் தொடர்பான இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். நிகழ்வொன்றின் பின்னர் அமைச்சர் அதுதொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,  எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் மக்கள் பல்வேறு பயணங்களை மேற்கொள்வதற்கு முடிவெடுத்திருப்பார்கள். அவ்வாறான பயணங்களை மேற்கொள்வதற்கு முன்பதாக கொரோனா மூன்றாவது தடுப்பூசியை கண்டிப்பாக பெற்றுக்கொள்வது சிறந்தது.

மூன்றாவது தடுப்பூசியான பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாமல் மக்கள் கூடும் இடங்களுக்கு செல்லல், பயணங்களை மேற்கொள்ளல் உள்ளிட்ட செயற்பாடுகள் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கும் சூழ்நிலைக்கு வழிவகுக்கும் என்றும் அதற்கிணங்க வருட இறுதியில் நாட்டில் கொவிட் சுனாமியொன்று உருவாகக்கூடிய அபாயநிலையே ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக்ெகாள்வதில் மக்கள் மீண்டும் புத்திசாலித்தனமாக செயற்படுகின்றனர். பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாமல் களியாட்டங்களை மேற்கொள்ள முயற்சித்தால் டிசம்பர் மாதத்தின் இறுதி வாரத்தில் கொரோனா வைரஸ் பரவும் நிலை மேலும் மோசமடையுமென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். (ஸ)

(லோரன்ஸ் செல்வநாயகம்)

Mon, 12/13/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை