பஸ் கட்டணங்களை அதிகரிக்குமாறு கோரல்

தனியார் பஸ் சங்கங்கள் அழுத்தம்

 

எரிபொருள் விலை அதிகரிப்பு, பஸ் வண்டிகளுக்கான உதிரிப்பாகங்கள் விலை அதிகரிப்பு போன்ற காரணங்களை முன்வைத்து நூற்றுக்கு 20 வீத  பஸ்கட்டண அதிகரிப்பை பெற்றுத்தரக் கோரி தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதற்கு மேலதிகமாக தற்போது 14 ரூபாவாகவுள்ள ஆகக்குறைந்த பஸ் கட்டணத்தை 20 ரூபாவாக அதிகரிக்க வேண்டமென்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். எதிர்வரும் 27ஆம் திகதிக்குள் இந்தத் திருத்தங்களை செய்யத் தவறினால் பணிப்பகிஷ்கரிப்பொன்றை மேற்கொள்ளப் போவதாவும் அவர் எச்சரித்துள்ளார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் விலை அதிகரிப்பு உதிரிப்பாகங்களின் விலை அதிகரிப்பு, சேவை கட்டணம் அதிகரிப்பு உள்ளிட்ட சில காரணங்களை கவனத்திற்கொண்டு பஸ் கட்டணத்தை அதிகரிப்பது அவசியமாகும். மோட்டார் வாகனக் கட்டளைச் சட்டத்தை திருத்துதல், காட் மூலமான பஸ் கட்டண அறிவீட்டு முறைமையை அறிமுகப்படுத்தல், பஸ் வண்டிகளுக்கான நிவாரணங்களைப் பெற்றுக்கொடுத்தல் போன்ற கோரிக்கைளை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தொடர்ந்தும் முன்வைத்து வந்துள்ளது. எனினும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலையிட்டு இது தொடர்பில் கவனம்செலுத்தாவிட்டால் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பணி பகிஷ்கரிப்பை முன்னெடுக்க நேரிடுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.(ஸ)

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Wed, 12/22/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை