வெளிநாட்டு கையிருப்பு வீழ்ச்சிக்கு தீர்வாகவே எரிபொருள் விலை உயர்வு

எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பான கேள்விக்கு டளஸ் பதில்

 

வெளிநாட்டு கையிருப்பு வீழ்ச்சிக்கான ஒரு தீர்வாகவே எரிபொருள் விலை உயர்வு தொடர்பான முடிவு எடுக்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும் 350- – 400 மில்லியன் டொலர் செலவிடப்படுவதோடு கையிருப்பு கரைவதற்கு இது பிரதான காரணமாக உள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் தகவல் ஊடகத்துறை அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

வெளிநாட்டு கையிருப்பு வீழ்ச்சி மற்றும் எரிபொருள் விலை உயர்வு தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த  அமைச்சர், வெளிநாட்டு கையிருப்பில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கையிருப்பு வீழ்ச்சி இரகசியமல்ல. 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அது மாறியுள்ளது.

மக்களின் வாழ்வாதார நிலைமை நெருக்கடி நிலைக்கு வந்துள்ள நிலையில் மத்திய வங்கி உட்பட சகல தரப்பினருடன் ஆராய்ந்தே எரிபொருள் விலை தொடர்பில் முடிவு செய்யப்பட்டது. வெளிநாட்டு நாணய கையிருப்பு வீழ்ச்சிக்கான ஒரு தீர்வாக இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும் 350 – -400 மில்லியன் டொலர் செலவிடப்படுகிறது. நாட்டின் பொருளாதாரத்திற்கு இந்த முடிவு சாதகமானதல்ல. ஆனால் உலகில் ஏனைய நாடுகளை போல எமக்கும் கொரோனா நெருக்கடிக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது. அதனால் பொறுப்பிலிருந்து எவருக்கும் ஒதுங்க முடியாது. மக்கள் உண்மை நிலையை உணர வேண்டும்.வெளிநாட்டு நாணய கையிருப்பு வீழ்ச்சியானது , கடந்த காலங்களில் சேர்ந்த கடன் சுமைகளுடன் சேர்ந்து இந்த நிலையை உருவாக்கியுள்ளது என்றார்.

 

ஷம்ஸ் பாஹிம்

Wed, 12/22/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை