பிலிப்பைன்ஸ் சூறாவளி: பலி 75 ஆக அதிகரிப்பு

பிலிப்பைன்ஸைத் தாக்கிய ராய் சூறாவளியால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 75க்கு உயர்ந்துள்ளது. பலரை இன்னமும் காணவில்லை.

பிலிப்பைன்ஸை இந்த ஆண்டு தாக்கியிருக்கும் மிக வலுவான சூறாவளியாக இது இருந்தது. புயல் காற்றால் வீடுகள் தரைமட்டமாயின. நாட்டின் தெற்கே சில தீவுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 3 மில்லியன் பேர் மின்சாரம் இல்லாமல் இருப்பதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்தது. சூறாவளியால் ஏற்பட்ட சேதத்தின் அளவை மதிப்பிட அதிகாரிகள் சிரமப்படுகின்றனர்.

இராணுவ வீரர்கள், பொலிஸ் அதிகாரிகள், கடலோரக் காவல்படையினர், தீயணைப்பாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் தேடல், மீட்புப் பணிகளை மேற்கொள்கின்றனர்.

Mon, 12/20/2021 - 08:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை