2 இலட்சம் கண்டல் தாவரங்கள் நடும் திட்டமும் புத்தளம் புதிய இறங்கு துறை திறப்பும்

2 இலட்சம் கண்டல் தாவரங்கள் நடும் திட்டமும் புத்தளம் புதிய இறங்கு துறை திறப்பும்-Planting of Mangrove Daplings & Opening of Puttalam New Jetty

- இலங்கை கடற்படையினரால் ஆரம்பித்து வைப்பு

புத்தளம் மாவட்டத்தின் சிலாபம் முதல் அரிப்பு வரையான கலப்பு பிரதேசத்தில் சுமார் இரண்டு இலட்சம் கண்டல் தாவரங்கள் நடும் விசேட  வேலைத்திட்டம் நேற்று (18) சனிக்கிழமை இலங்கை கடற்படையினரால் புத்தளம் கங்கேவாடி பிரதேசத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதேவேளை, புத்தளம் கடல் ஏரியில் நிர்மாணிக்கப்பட்ட புதிய இறங்கு துறையும் திறந்து வைக்கப்பட்டது.

புத்தளம் மாவட்டத்தின் வண்ணாத்திவில்லு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கங்கேவாடி பிரதேசத்தில் நேற்று (18) காலை 9.00 மணியளவில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உளுகேதென்னவினால் இந்த கண்டல் தாவரங்கள் நடும் வேலைத்திட்டம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

2 இலட்சம் கண்டல் தாவரங்கள் நடும் திட்டமும் புத்தளம் புதிய இறங்கு துறை திறப்பும்-Planting of Mangrove Daplings & Opening of Puttalam New Jetty

இலங்கை கடற்படையின் 71ஆவது ஆண்டு நிறைவையொட்டி நாடு முழுவதிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு வேலைத்திட்டங்களின் ஒரு அங்கமாகவே இந்த கண்டல் தாவரங்கள் நடும் வேலைத்திட்டமும், இறங்கு துறை நிர்மாணிக்கும் பணியும் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டது.

சிலாபம், புத்தளம், கல்பிட்டி கலப்பு, டச்சு கால்வாய், கலா ஓயா, மல்வத்து ஓயா மற்றும் மோதரகம் ஆற்றுக் கரை அறிப்பினை கட்டுப்படுத்தும் நோக்கிலும் தற்போதுள்ள கண்டல் தாவரங்களின் அளவினை மேலும் அதிகரிக்கும் நோக்கிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட டுக்கப்பட்ட  33 இடங்களில்இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

2 இலட்சம் கண்டல் தாவரங்கள் நடும் திட்டமும் புத்தளம் புதிய இறங்கு துறை திறப்பும்-Planting of Mangrove Daplings & Opening of Puttalam New Jetty

இதேவேளை புத்தளத்தில் கடற்படையினரால் சுமார் 2 மில்லியன் ரூபாய் செலவில்  நிர்மாணிக்கப்பட்ட புதிய இறங்கு துறையும் நேற்று 11.00 மணியளவில் கடற்படைத் தளபதியினால் திறந்து வைக்கப்பட்டது.

புத்தளம் நகர மண்டபத்திற்கு எதிரில் புத்தளம் கொழும்பு முகத்திடலில் இந்த இறங்கு துறை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

2 இலட்சம் கண்டல் தாவரங்கள் நடும் திட்டமும் புத்தளம் புதிய இறங்கு துறை திறப்பும்-Planting of Mangrove Daplings & Opening of Puttalam New Jetty

சுமார் 93 அடி நீளமான இந்த இறங்கு துறையின் நிர்மாணப் பணிகள் கடற்படையினரால் நவம்பர் மாதம் 6ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்ததோடு நேற்று முன்தினம் அதாவது 40 நாட்களுக்குள் பணிகள் முடிக்கப்பட்டு இவ்வாறு திறந்து வைக்கப்பட்டது.

2 இலட்சம் கண்டல் தாவரங்கள் நடும் திட்டமும் புத்தளம் புதிய இறங்கு துறை திறப்பும்-Planting of Mangrove Daplings & Opening of Puttalam New Jetty

சுற்றுலாத்துறையினை ஊக்குவித்தல் மற்றும் கடலில் அனர்த்தங்களுக்கு உள்ளாகும் கடற்றொழிலாளர்களுக்குத் துரிதமாக உதவிகளை வழங்குவதற்கும் இந்த புதிய இறங்கு துறையின் மூலம் முடியுமாக இருக்கும் என்றும் கடற்படையினர் தெரிவித்தனர்.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன  தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வுகளில், வடமேல் மாகாண பிரதம செயலாளர் பீ.பீ. எம். சிறிசேன, புத்தளம் மாவட்டச் செயலாளர் ஆர். ஜீ. விஜேசிறி, புத்தளம் நகர சபைத் தலைவர் எம். எஸ். எம். றபீக், வடமேல் பிராந்திய கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த குலரத்ன, புத்தளம் மாவட்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் ஆர். எம். எம். பெரேரா, புத்தளம் வண்ணாத்திவில்லு பிரதேச செயலாளர்கள், பொலிஸ் நிலையங்களில் பொறுப்பதிகாரிகள், கடற்படையினர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

(புத்தளத்திலிருந்து ஸாதிக் ஷிஹான், புத்தளம் விசேட நிருபர்)

Sun, 12/19/2021 - 17:06

from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை