புத்தளத்தில் நீர்த்தேக்க வான் கதவுகள் திறப்பு

மக்களை அவதானமாக இருக்க பணிப்பு

புத்தளம் மாவட்டத்தில் ஐந்து நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் 32 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.  இதன்படி, தெதுரு ஓயா நிர்த்தேக்கத்தின் எட்டு வான் கதவுகள் ஐந்து அடி வரையும், இராஜாங்கணை நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் எட்டு அடி வரையும், இரண்டு வான் கதவுகள் ஆறு அடி வரையும், இரண்டு வான் கதவுகள் நான்கு அடி வரையும், நான்கு வான் கதவுகள் இரண்டு அடிவரையும் தப்போவ நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் ஒரு அடி வரையும், இரண்டு வான் கதவுகள் 06 அங்குலம் வரையும் திறக்கப்பட்டுள்ளன.

அத்துடன், இங்கினிமிட்டிய நீர்த்தேக்கத்தின் 06 வான் கதவுகளும் இரண்டு அடி வரையும், அங்கமுவ நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் நான்கு அடி வரையும் திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய கடமை நேர அதிகாரியொருவர் தெரிவித்தார்.

 

 

Sat, 11/27/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை