கிளிநொச்சியில் பொலிஸாரைதாக்கியோர் கொழும்பில் கைது

கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியில் இரு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட தகராறை சமரசம் செய்ய முயன்ற பொலிஸ் அதிகாரிகளை தாக்கிய 06 பேர் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராஜகிரிய பிரதேசத்திலுள்ள கட்டட நிர்மாணம் நடைபெறும் இடமொன்றில் வைத்து இச் சந்தேகநபர்கள் 06 பேரும் நுகேகொடை, மேல்மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தர்மபுரத்தை சேர்ந்த 20 மற்றும் 28 வயதுடைய சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் கடந்த ஒக்டோபர் 04 ஆம் திகதி இடம்பெற்ற மோதலொன்றின்போதே, இவர்கள் பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்து அதிகாரியொருவரையும் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் தொடர்பில் தேடப்பட்டுவந்த ஆறு பேரும் இவ்வாறு சுமார் ஒன்றரை மாதங்களின் பின்னர் இராஜகிரியவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

 

Sat, 11/27/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை