ஷரியா சட்டத்தை அமுல்படுத்த ஆப்கான் ஐ.எஸ்.ஐ.எஸ் உறுதி

ஷரியா சட்டத்தை அமுல்படுத்துவதே தமது கடும் இலக்காக இருப்பதாக குறிப்பிட்டிருக்கும் ஆப்கானிஸ்தான் ஐ.எஸ்.ஐ.எஸ் கொராசான், அல்குர்ஆன் மற்றும் இஸ்லாத்திற்கு எதிராக உலகில் யார் இருந்தாலும் கடும் கோபத்தை எதிர்கொள்வார்கள் என்று எச்சரித்துள்ளனர்.

'எமது முதல் இலக்கு பாகிஸ்தானை அழிப்பதாகும். ஏனென்றால் ஆப்கானில் ஏற்பட்டிருக்கும் அனைத்திற்கும் பாகிஸ்தானே பிரதான காரணம். தலிபான்கள் எப்போது இங்கு இருந்தார்கள் (முந்தைய அரசு தொடர்ந்து ஆட்சியில் இருந்தபோது கூட) தாம் நாட்டின் 80 வீதமான பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகக் கூறினார்கள். ஆனால் அவர்கள் ஷரியா சட்டங்களை அமுல் செய்யவில்லை. அதனால் தான் நாம் நிலையாக இருந்து இந்தப் பகுதியை கைப்பற்ற ஆரம்பித்தோம்' என்று ஐ.எஸ்.ஐ.எஸ்.–கே இன் உறுப்பினர் ஒருவரான நசீபுல்லா கேநியுஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

தலிபான்கள் இருந்தது தொடக்கம் ஆப்கானிஸ்தான் மோசமான மற்றும் பாதகமான நிலைக்குச் சென்றிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இரண்டரை மாதங்களுக்கு முன்னர் ஆப்கானை கைப்பற்றிய தலிபான்கள் நாட்டை அழித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

'ஷரியா சட்டத்தை அமுல்படுத்த நாம் விரும்புகிறோம். எமது இறைத்தூதர் வாழ்ந்த, அணிந்த வழிகளையும் நாம் அமுல்படுத்த வேண்டும். ஹிஜாப் ஆடையும் இதில் அடங்கும். இப்போது போர் புரிய எம்மிடம் அதிகம் ஒன்றும் இல்லை. ஏதாவது தந்தால், இப்போதே நான் பாகிஸ்தானுக்கு எதிராக போராடுவேன்' என்று நசீபுல்லா மேலும் தெரிவித்தார்.

Thu, 11/04/2021 - 08:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை