ஆபிரிக்க பிரச்சினைகளால் சீனா வர்த்தகத்திற்கு பெரும் பாதிப்பு

ஆபிரிக்க பிராந்தியத்தில் அதிகரித்து வரும் ஸ்திரமற்ற நிலை, அரசியலை தவிர்ப்பது மற்றும் வழக்கமான வர்த்தகங்களை முன்னெடுக்கும் சீனாவின் கொள்கையில் அவதானத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அணுகுமுறை தொடர்ந்து முன்னெடுக்கப்படுமா என்ற கேள்வியையும் இது எழுப்பியுள்ளது. பல ஆண்டுகளாக சீன நிறுவனங்கள் உள்நாட்டு போர்கள் மற்றும் ஆட்சிக் கவிழ்ப்பு சதிகளுக்கு மத்தியில் செழுத்தி வளர்ந்து வந்தது. சீனாவின் தலையீடு இல்லாத கொள்கையின் அங்கமாக இது உள்ளது.

எத்தியோப்பியா, கினியா மற்றும் சூடான் ஆகிய மூன்று நாடுகளிலுமே அண்மைக் காலத்தில் சீன நாட்டவர்கள் மற்றும் சீன நலன் சார்ந்து அதிகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கும் நாடுகளாக இருப்பதாக ஜோர்ஜ் வொஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சர்வதேச விவகாரங்களுக்கான கல்லூரியின் பேராசிரியர் டேவிட் ஷின் கூறுகிறார். இந்த மூன்று நாடுகள் மீது சீனா குறிப்பிடத்தக்க அவதானம் வெலுத்துகிறது. பாரிய கடன் நிதி மற்றும் எத்தியோப்பியாவில் முதலீடு, கினியாவில் அலுமினிய தாதுப்பொருள் மற்றும் சூடானில் எண்ணெய் ஆகியவை இதில் அடங்கும். 'இந்த மூன்று விவகாரங்களிலும், தமது நாட்டு மக்களை பாதுகாப்பதாற்காக சீனா விரைவாக நடவடிக்கை எடுத்தது.

எத்தியோப்பியாவின் டிக்ரேய் பிராந்த்தியத்தில் இருந்து தமது நாட்டவர்களை விரைவாக வெளியேற்றியது மற்றும் பாதுகாப்பாக வீடுகளில் தங்கியிருக்க வலியுறுத்தியது மற்றும் சூடான் மற்றும் கினியாவில் செயற்பாடுகளை இடைநிறுத்தியதை குறிப்பிடலாம்.

எத்தியோப்பிய சிவில் யுத்தத்தில் சீனா எந்த பக்கமும் சாராததோடு சூடான் இராணுவ சதிப்புரட்சியில் நடுநிலையை பேணி வருகிறது' என்று அவர் குறிப்பிட்டார். ஆனால் கினியாவில் இராணுவ சதிப்புரட்சிக்கு சீனா எதிர்ப்பு வெளியிட்டதோடு ஜனநாயக முறையில் தேர்வான ஜனாதிபதியை இராணுவம் உடன் விடுவிக்கவும் வலியுறுத்தியது.

Wed, 11/03/2021 - 08:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை