வீதியை கடக்க முற்பட்ட போக்குவரத்து பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு

முந்தல் பொலிஸ் நிலையம் முன் சம்பவம்

வீதி விபத்துச் சம்பவத்தில் காயமடைந்த நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த முந்தல் பொலிஸ் நிலையப் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி (3) உயிரிழந்துள்ளார்.பல்லம பகுதியைச் சேர்ந்த பொலிஸ் பரிசோதகர் டபிள்யூ. எம்.ஆர். பண்டார என்பவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று, குறித்த போக்குவரத்து பொறுப்பதிகாரி கடமை நிமித்தம் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக வீதியைக் கடக்க முற்பட்டபோது, சிலாபத்திலிருந்து புத்தளம் பகுதி நோக்கிச் பயணித்த பட்டா ரக லொறி ஒன்று பொறுப்பதிகாரி மீது மோதியுள்ளது. அதனையடுத்து, புத்தளத்திருந்து சிலாபம் நோக்கிப் பயணம் செய்த மற்றுமொரு சொகுசு கார் ஒன்றும் அதே சமயம் பொறுப்பதிகாரி மீது மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் இரண்டு நாட்கள் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்ட போதிலும் அவர் நேற்று முன்தினமிரவு (03) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

 

Fri, 11/05/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை