ஆசிரியர் தொழிற்சங்கங்கள் ஜீவனுடன் நேற்று திடீர் சந்திப்பு

தீர்வு காண உதவுமாறு ஸ்டாலின் கோரிக்கை

இலங்கை ஆசிரியர் தொழிற்சங்கத்தவர்களுக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று கொழும்பு சௌமிய பவனில் இடம்பெற்றது.

இதன்போது ஆசிரியர் தொழிற்சங்க பிரச்சினைகளை விரைவில் தீர்த்து தரும்படி அமைச்சரிடம் கேட்டுக்கொண்டனர். இதற்கமைய ஆசிரியர் சங்கமும் தொழிற்சங்கம் நடத்துகின்றது. எனவே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எப்போதும் தொழிலாளர்களின் நலன்களை சார்ந்தே செயற்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக பாராளுமன்றத்தில் உரியதரப்பினரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இக்கலந்துரையாடலில் பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் கணபதி கனகராஜ், ஆசிரியர் தொழிற் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 

Fri, 11/05/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை