எல்லை தடைகளை தளர்த்துகிறது அவுஸ்திரேலியா

குறிப்பிட்ட குழுக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் வெளிநாட்டவர்கள் நாட்டுக்குள் நுழைவதற்கான தடையில் குறிப்பிடத்தக்க தளர்வை கொண்டுவந்திருப்பதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.

வரும் டிசம்பர் 1 ஆம் திகதி நாட்டுக்குள் அனுமதிக்கப்படுபவர்களில் தொழில் தேர்ச்சி உடைய குடியேறிகள் மற்றும் வெளிநாட்டு மாணவர்கள், அதேபோன்று ஜப்பான் மற்றும் தென் கொரிய பிரஜைகள் அடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த அனைவரும் முழுமையாக தடுப்பூசி பெற்றிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியா தனது சொந்த குடிமக்கள் உட்பட உலகின் சில இறுக்கமான எல்லைக் கட்டுப்பாடுகளை கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நடைமுறைப்படுத்தியது.

இந்நிலையில் கொண்டுவரப்பட்டிருக்கும் தளர்வு “முன்னோக்கிச் செல்வதற்கான முக்கியமான படி” என்று அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்தார்.

இந்த தளர்வு விதிகளின்படி, தகுதியுடைய விசா வைத்திருப்பவர்கள், பிரத்தியேக கட்டுப்பாடுகள் இன்றி, அவுஸ்திரேலியாவுக்கு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்கு மேற்பட்ட 85 வீதத்திற்கு அதிகமானவர்கள் தடுப்பூசி பெற்றிருக்கும் நிலையில் நாட்டை மீண்டும் திறக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

Tue, 11/23/2021 - 10:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை