படகுப்பாதை கவிழ்ந்ததில் மாணவர்கள் உள்ளிட்ட 6 பேர் பலி

படகுப்பாதை கவிழ்ந்ததில் மாணவர்கள் உள்ளிட்ட 6 பேர் பலி-6 Reported Dead-Passenger Punt-Floating Bridge Capsized-Kurinchakerny-Kinniya-Trincomalee

- 11 பேர் வைத்தியசாலையில்; மேலும் பலரை காணவில்லை

திருகோணமலை, குறிஞ்சாக்கேணியில் படகுப்பாதை கவிழ்ந்ததில் 4 மாணவர்கள் உள்ளிட்ட 6 பேர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (23) காலை இடம்பெற்ற இவ்விபத்தில் பாடசாலை செல்வதற்காக பயணித்த மாணவர்கள் குறித்த படகுப்பாதையில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வனர்த்தத்தில் சிக்கிய 11 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, அவர்களில் 4 பேர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சிலரை காணாமல் போயுள்ள நிலையில் அவர்களை தேடும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

100%

Tue, 11/23/2021 - 10:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை