ஜப்பான் பிரதமராக மீண்டும் கிஷிடோ

அறுதிப் பெரும்பான்மையுடன் தெரிவு

ஜப்பானின் புதிய பிரதமராக புமியோ கிஷிடோ மீண்டும் தேர்ந்த​ெடுக்கப்பட்டுள்ளார்.

பாராளுமன்றத் தேர்தலில் பிரதமர் புமியோ கிஷிடோ தலைமையிலான லிபரல் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றதைத் தொடா்ந்து, அவா் புதன்கிழமை மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டார்.

அவருக்கு முன்னா் பிரதமராக இருந்த யோஷிஹிடே சுகா, கொரோனா நெருக்கடியை சரியாகக் கையாளவில்லை என்று முறைப்பாடு எழுந்தது. அதனைத் தொடர்ந்து, தனது பதவிக் காலம் முடிவதற்கு சுமார் 03 ஆண்டுகளுக்கு முன்னரே அவா் பதவியை இராஜினாமா செய்தார். சுகாவுக்குப் பதிலாக புமியோ கிஷிடோ பிரதமரானார். கடந்த மாதம் 4ஆம் திகதி நடைபெற்ற தோ்தலில் அவரது கட்சி அறுதிப் பெரும்பான்மை பெற்றது.

 

 

Fri, 11/12/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை