மின்சாரத் திட்டங்களில் வடக்கிலுள்ளோருக்கும் அரச வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்

சபையில் சார்ள்ஸ் நிர்மலநாதன் எம் பி. வேண்டுகோள்

மன்னார் காற்றாலை மின்சார உற்பத்தி நிலையத்தில் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டத்தினருக்கும் வேலைவாய்ப்புக்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம். பி. சார்ள்ஸ் நிர்மலநாதன் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மேற்படி மின்சார நிலையத்தை திறந்து வைத்த முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்‌ஷ வழங்கிய உறுதிமொழிக்கிணங்க மேற்படி மாவட்டங்களிலுள்ளவர்களுக்கும் வேலை வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டுமென அவர் நேற்று சபையில் கேட்டுக்கொண்டார். அதேவேளை, வடக்கிற்கான எரிபொருள் விநியோகம் தொடர்பில் சபையில் கருத்து தெரிவித்த அவர், கொழும்பிலிருந்து நேரடியாக ரயில் மூலம் காங்கேசன்துறைக்கு எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அத்துடன் எரிபொருளுக்கான விலை அதிகரிப்பு மக்களுக்கு பெரும் சுமையாக அமையும் என குறிப்பிட்ட அவர், அரசாங்கம் மானியங்களை வழங்கி எரிபொருள் விலையை அதிகரிப்பதை தடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். பாராளுமன்றத்தில் நேற்று மின்சக்தி அமைச்சு மற்றும் வலுசக்தி அமைச்சு ஆகியவற்றின் மீதான வரவு செலவுத்திட்ட குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

Tue, 11/30/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை