சீனாவில் குழந்தைப் பிறப்பு வீதத்தில் மிகக்பெரும் சரிவு

சீனாவின் குழந்தைப் பிறப்பு வீதம், கடந்த ஆண்டு வரலாறு காணாத அளவு சரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020இல் ஒவ்வொரு 1,000 பேருக்கும் 8.52 குழந்தைகள் பிறந்ததாகச் சென்ற வாரம் வெளியான 2021 புள்ளிவிபரப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. 1978ஆம் ஆண்டு அந்தப் புள்ளிவிபரங்களைச் சேகரிக்க ஆரம்பித்ததில் இருந்து பதிவாகிய மிகக் குறைவான எண்ணிக்கை இதுவாகும்.

குழந்தைப் பிறப்பு வீதத்தை உயர்த்துவதற்காக 2016ஆம் ஆண்டு, சீனாவின் ‘ஒரே குழந்தை’ கொள்கையில் மாற்றங்கள் செய்யப்பட்டன. தம்பதிகள் 2 குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டின் ஆரம்பத்தில் அந்த எண்ணிக்கை 3ஆக அதிகரிக்கப்பட்டது. எனினும், கொள்கை மாற்றங்கள் பயனளிக்கவில்லை. அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவும், கருத்தரிப்பு குறித்து அதிகமான பெண்கள் சுயமாக முடிவெடுப்பதும் அதற்குக் காரணங்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Thu, 11/25/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை