திருக்கோவில் பிரதேச மட்ட விளையாட்டுப் போட்டி: வெற்றி பெற்ற இளைஞர் கழக வீரர்கள் பாராட்டி கௌரவிப்பு

திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இளைஞர் கழகங்களுக்கிடையில் இளைஞர் விவகார விளையாட்டுதுறை அமைச்சினால் நடாத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிப் பெற்ற கழக வீர வீராங்கனைகள் பாராட்டி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்வு இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் கே.பிரபாகரன் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் கடந்த புதன்கிழமைமலை இடம்பெற்று இருந்தன.

இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சினால் திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள இளைஞர் கழகங்களுக்கிடையில் நடாத்தப்பட்ட குழு மற்றும் சுவட்டு நிகழச்சி விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிப்பெற்ற 15 கழகங்களைச் சேர்ந்த சுமார் 65 வீர வீராங்கனைகளுக்கு வெற்றிக் கிண்ணங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சின் 33வது தேசிய மட்ட கிரிகெட் சுற்றுப் போட்டியில் பங்குபற்றவுள்ள திருக்கோவில் பிரதேச பெண்கள் கிரிகெட் கழக வீராங்கனைகளுக்கான சீருடை மற்றும் காலணிகள் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இருந்ததுடன் நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.அனோஜா மாவட்ட இளைஞர் சேவைகள் அதிகாரி ஏ.முபாரக் அலி மற்றும் நன்கொடையாளர்கள், விளையாட்டுதுறை பயிற்றுப்விப்பாளர்கள், அரச உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர்கள், விளையாட்டு வீர வீராங்கனைகள் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.

திருக்கோவில் தினகரன் நிருபர்

Fri, 11/26/2021 - 09:40


from thinakaran

கருத்துரையிடுக

புதியது பழையவை