மேற்கிந்திய தீவுகள் 6/113 ஓட்டங்கள் இலங்கை 273 ஓட்டங்களால் முன்னிலை

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் துடுப்பெடுத்தாடி வரும் மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 113 ஓட்டங்களை பெற்றுள்ளது.அவ்வணி 273 ஓட்டங்களால் பிந்தங்கிய நிலையில் உள்ளது.இலங்கையின் சுழற்பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் மேற்கிந்திய தீவுகள் அணி தடுமாற்றத்துடன் ஆடுவதை காணலாம்.2ம் நாளில் 13 விக்கெட்டுக்கள் வீழ்ந்து 232 ஓட்டங்கள் பெறப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். அவ்வணி சார்பாக அணியின் தலைவர் கிரேக் பரத்வைட் 41 ஓட்டங்களையும் பிளக்வூட் 20 ஓட்டங்களையும் சாய் கோப் 10 ஓட்டங்களுக்கும் ஆட்டமிழந்து சென்றனர்.அவ்வணி சார்பாக கைல்மெய்ர்ஸ் 22 ஓட்டங்களும் ஜேசன் ஹோல்டர் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர் .இலங்கை அணி சார்பாக பந்து வீச்சில் லசித் எம்புல்தெனிய ஒரு விக்கெட்டையும் ரமேஸ் மென்டிஸ் 3 விக்கெட்டையும் பிரவீன் ஜயவிக்கிரம 2 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸை நிறைவுசெய்துள்ள இலங்கை அணி, சகல விக்கெட்டையும் இழந்து 386 ஓட்டங்களை குவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணி சார்பாக அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன 147 ஓட்டங்களையும் தனஞ்சய டி சில்வா 61 ஓட்டங்களயும் தினேஸ் சந்திமால் 45 ஓட்டங்களையும் பெத்தும் நிசங்க 56 ஓட்டங்களையும் பெற்றதே கூடுதலான ஓட்ட எண்ணிக்கையாகும்.அத்துடன் இலங்கை அணி முதல் நாள் ஆட்ட நேர நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 267 ஓட்டங்களை பெற்றிருந்துது.மேற்கிந்திய அணி சார்பாக 88 ஓட்டங்களை கொடுத்து 5 விக்கெட்டை கைப்பற்றினார் ரேஸ்டன் ஷேஷ்.

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணியின் அறிமுக வீரர் ஜெரமி சொலொன்ஷோவுக்கு பதிலாக மாற்றீடு வீரராக ஷேய் ஹோப் இணைக்கப்பட்டுள்ளார்.

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவருகின்றது.

இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டமான (21), மதியபோசன இடைவேளைக்கு முன்னர், திமுத் கருணாரத்ன வேகமாக அடித்த பந்து ஒன்று, ஷோர்ட் லெக் (Short Leg) பகுதியில் களத்தடுப்பில் ஈடுபட்ட மே.தீவுகளின் அறிமுக வீரர் ஜெரமி சொலேன்ஷோவின் ஹெல்மட்டில் பட்டதையடுத்து, அவர் வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.

தொடர்ந்து சிகிச்சைப்பெற்றுவந்த ஜெரமி சொலேன்ஷோவின் உடல்நிலை சரியாகி வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், அவர் இந்த போட்டியில் விளையாடுவதற்கான சரியான உடற்தகுதியுடன் இல்லை என்பதால், மாற்று வீரராக (concussion substitute) ஷேய் ஹோப் இணைக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டை பொருத்தவரை, பந்து தலையில் தாக்கினால், குறித்த வீரரை போன்று, மற்றுமொரு வீரரை அணியில் இணைக்க முடியும். அந்தவகையில், துடுப்பாட்ட வீரரான ஜெரமி சொலேன்ஷோவுக்கு பதிலாக மற்றுமொரு துடுப்பாட்ட வீரரான ஷேய் ஹோப் இணைக்கப்பட்டுள்ளார். இன்று போட்டியின் மூன்றாவது நாளாகும்.

 

Tue, 11/23/2021 - 06:00


from thinakaran

கருத்துரையிடுக

புதியது பழையவை