ஆங்கிலக் கால்வாயில் அகதி படகு மூழ்கியதில் 27 பேர் பலி

இரப்பர் படகில் ஆங்கிலக் கால்வாயைக் கடக்க முயன்ற அகதிகள் மற்றும் தஞ்சக் கோரிக்கையாளர்கள் படகில் காற்று வெளியேறி, மூழ்கியதில் குறைந்தது 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரான்ஸ் மற்றும் பிரிட்டனை பிரிக்கும் இந்தக் கால்வாயில் குடியேறிகளுடன் தொடர்புபட்டு இடம்பெற்ற மிக மோசமான விபத்தாக இது உள்ளது.

ஐந்து பெண்களும் குழந்தைகள் இருவரும் உயிரிழந்தவர்களில் அடங்குவர். படகில் 34 பேர் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருவர் காப்பற்றப்பட்டனர். மேலும் ஒருவரைக் காணவில்லை.

படகில் செல்ல உதவிய சந்தேகத்தின் பேரில் பிரான்ஸில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெற்று இரப்பர் படகு ஒன்று இருப்பதாகவும் அருகில் பலர் உணர்வின்றி மிதப்பதாகவும் மீட்பு சேவைக்கு அழைப்பு கிடைத்துள்ளது. இதனை அடுத்து குறைந்தது மூன்று படகுகள் மற்றும் மூன்று ஹெலிகொப்டர்களை கொண்டு பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் கூட்டாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டது.

ஆபத்திற்கு மத்தியில் சிறிய படகுகள் அல்லது இரப்பர் படகுகளில் இந்த கால்வயை கடக்க முயல்பவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

Fri, 11/26/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை