2022 வரவு செலவுத் திட்டத்தில் 102 பிரிவினரின் பங்களிப்பு

2022 வரவு செலவுத் திட்டத்தில் 102 பிரிவினரின் பங்களிப்பு-102 Different Group's Ideas Taken to 2022 Budget

2022 வரவுசெலவுத் திட்ட தயாரிப்பில் வரலாற்றில் பெரும் எண்ணிக்கையிலானோரின் பங்களிப்பு பெறப்பட்டுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நிதியமைச்சர் பசில் ராஜபக்‌ஷவின் வழிகாட்டலின் கீழ், நிதியமைச்சின் நேரடி தலையீட்டின் மூலம், நிறுவனங்கள், அமைப்புகள், தனிநபர்கள் பெருமளவானோரின் யோசனைகள் மற்றும் அபிப்பிராயங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

கொவிட் வைரஸ் தொற்றுக்கு மத்தியில் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பொருளாதாரத்திற்கு மிகுந்த அழுத்தம் ஏற்பட்டிருக்கின்றது. அந்த சவால்களை வெற்றிகொண்டு வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதனை நோக்காகக் கொண்ட வரவுசெலவுத் திட்டத்தை உருவாக்குவதே நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் யோசனையாகும்.

இந்த 2022 வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பதில், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சின் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மாவட்ட அரசியல் பலம் கொண்டவர்கள், பல்வேறு தொழிற்சங்கங்கள், வர்த்தக சங்கங்கள், ஏற்றுமதியாளர்கள், இளைஞர் அமைப்புகள், தேயிலை, தெங்கு. புடவை, மரக்கறி மற்றும் பழவகைகள், உணவுகள், மீன்பிடி, தகவல் தொழில்நுட்பம், விலங்கு வேளாண்மை, மாணிக்கம் மற்றும் தங்காபரணங்கள் உள்ளிட்ட 102 பிரிவைச் சேர்ந்த குழுவினர் பங்கெடுத்திருந்தனர்.

2022 வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பதில் பங்கேற்ற அமைப்புகள், அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களின் பெயர் பட்டியல் வருமாறு...

Sun, 11/07/2021 - 10:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை