சீமெந்து வகைகளின் விலைகள் அதிகரிப்பு

சீமெந்து வகைகளின் விலைகள் அதிகரிப்பு-Cement Prices Increased

கட்டுப்பாட்டு விலை நீக்கத்தை தொடர்ந்து, சீமெந்து உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் சீமெந்துகளின் விலைகளை அதிகரித்துள்ளன.

அதற்கமைய 50 கிலோ கிராம் சீமெந்துப் பொதியின் விலை ரூ. 177 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, சீமெந்து உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அதற்கமைய, 50 கி.கி. சீமெந்துப் பொதியொன்றின் புதிய விலை ரூ. 1,275 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் 50 கி.கி. சீமெந்துப் பொதியின் விலை ரூ. 1,098 ஆக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Sun, 11/07/2021 - 12:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை