‘அமேசான்’ காடழிப்பு 15 ஆண்டுகளில் உச்சம்

பிரேஸில் நாட்டின் அமேசான் மழைக்காடுகளில் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத வகையில், காடுகளின் அழிப்பு 22 வீதம் உயர்ந்துள்ளது.

ஜனாதிபதி ஜேர் பொல்சோனாரோ ஆட்சியின் கீழ், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகக் காடுகளின் அழிப்பு அதிகரித்துள்ளது. விவசாயம், சுரங்க நடவடிக்கைகள் ஆகியவற்றை அவர் ஊக்குவிப்பதாக, எதிர்க்கட்சியினர் குறைகூறியுள்ளனர்.

காடுகளின் அழிப்பு அதிகரித்துள்ளதாக ஒப்புக்கொண்ட பிரேஸிலின் சுற்றுச்சூழல் அமைச்சர், அதற்கு எதிராக இன்னும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கச் சூளுரைத்தார்.

இருப்பினும், சட்டவிரோதக் காடழிப்புக்கு எதிராக அண்மையில் எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகளைத் தகவல் தரவுகள் பிரதிபலிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

அண்மையில் நடந்தேறிய சிஓபி26 பருவநிலை மாநாட்டில், 2028க்குள் காடழிப்பை முற்றிலும் முடிவுக்குக் கொண்டுவர, பிரேஸில் உறுதியளித்திருந்தது.

அமேசானில் மூன்று மில்லியன் மரங்கள் மற்றும் விலங்கு இனங்கள் இருப்பதோடு அங்கு ஒரு மில்லியன் பழங்குடி மக்கள் வாழ்கின்றனர்.

Sun, 11/21/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை