பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது பெற்றோரின் கடமையாகும்

மஹவெல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி

தற்போது நிலவும் சமூகச் சூழலில் தத்தமது பிள்ளைகளை மிகவும் கண்ணும் கருத்துமாகப் பாதுகாக்க வேண்டியது பெற்றோர் ஒவ்வொருவரினதும் தலையாய கடமையாகும் என மஹவெல பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பாலித்த ஜயரத்ன தெரிவித்தார்.

பல்லேப்பொல பிரதேச சபை கேட்போர் கூடத்தில் அண்மையில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

பிள்ளைகள் தமது வயதை ஒத்தவர்களுடன் பழகுவதற்கு அனுமதிக்க வேண்டுமே ஒழிய அவர்களது வயதுக்கு மூத்த நபர்களுடன் பழகுவதற்கோ, நட்பு கொள்வதற்கோ அனுமதிக்கக் கூடாது. விசேடமாக 16 முதல் 18 வயது வரையிலான பிள்ளைகளை தமது கண்ணெனப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது பெற்றோர்களின் பாரிய பொறுப்பாகும். பிள்ளைகள் எப்போதும் தத்தமது வயதை ஒத்தவர்களுடன் அன்றி வயதில் மூத்த நபர்களுடன், மற்றும் அறியாதவர்களுடன் பழகுவதை பெற்றோரை முற்றாக தடை செய்ய வேண்டியது அவர்களது பொறுப்பாகும்.

தற்போது கைத்தொலைப் பேசி கள் சிறுவர்களை ஆக்கிரமித்துள்ளன. கணனிப் பாவனைகளும் அவ்வாறே. எனவே இவற்றை சிறுவர்கள் கையாளுவது தொடர்பில் பெற்றோர் மிகுந்த அவதானம் செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.

தம்புள்ள தினகரன் நிருபர்

Sun, 11/21/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை