சட்ட விரிவுரையாளர் கமலா நாகேந்திரா காலமானார்

இலங்கை சட்டக்கல்லூரி மற்றும் கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடம் என்பவற்றின் முன்னாள் சட்ட விரிவுரையாளர் கலாநிதி கமலா நாகேந்திரா 30ஆம் திகதி அவுஸ்ரேலியாவில் காலமானார். 

தேச வழமைச் சட்டம் மற்றும் பெண்கள் சிறுவர் உரிமைகள் தொடர்பான சட்டங்கள்,தொழிலாளர் தொடர்புடைய சட்டங்கள்,குடும்பச் சட்டம் என்பவற்றில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற அவர் தேச வழமைச் சட்டத்தில் பெண்களது சொத்துரிமை தொடர்பில் ஆங்கில மொழிமூல நூல் ஒன்றையும் எழுதியுள்ளார்.

யாழ்ப்பாணம் அல்வாயை பிறப்பிடமாக கொண்ட இவர் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் பழைய மாணவியுமாவார்.  

Sat, 10/02/2021 - 08:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை